Thursday, July 9, 2015

சில தேர்தல் துணுக்குகள்


சில தேர்தல் துணுக்குகள் 


RESULTS OF PARLIAMENTARY GENERAL ELECTION - 1947
58

 Kalmunai 

M.S. Kariapper--- Key ---  6,886
K. Kanapathipillai--- Elephant--- 3,592
M.A.L. Kariapper--- Hand--- 2,978

RESULTS OF PARLIAMENTARY GENERAL ELECTION - 1956
58 

Kalmunai 

M.S. Kariapper--- House--- 9,464 
M.A. Abdul Majeed--- Tree--- 6,095
N.T. Francis Xavier--- Key--- 4,242


1947ல் நடந்த சுதந்திர இலங்கையின் முதற் பொதுத் தேர்தலில் கேற் முதலியார் எம்.எஸ். காரியப்பர் கல்முனைத் தொகுதியில்; மிக இலகுவாக வெற்றிவாகை சூடியதுடன்ää  தென்கிழக்கின் முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் என்ற பெருமைக்கு உரித்தானார்.  இத்தேர்தலில் இவர் ஐ.தே.க. வில் போட்டியிட்டு 6ää887 வாக்குகள் பெற்றார்.  இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திரு. கே. கணபதிபிள்ளை  அவர்கள் 3552 வாக்குகளே பெற்றார்.

1960கேற்முதலியாரின் முயற்சியில் தென்கிழக்குப் பிரதேசம் கல்முனைää நிந்தவ10ர்ää பொத்துவில்ää அம்பாறை ஆகிய நான்கு தொகுதிகளாகக் பிரிக்கப்பட்டன. அதுவரை பட்டிருப்புத் தொகுதியோடிருந்த ஊர்களான மருதமுனைää பெரியநீலாவணைää சேனைக்குடியிருப்புää நற்பிட்டிமுனை என்பன கல்முனைத் தொகுதியின் கீழ் கொணரப்பட்டன.


    1960 இல் கேற்முதலியார் எம்.எஸ். காரியப்பர் திரு. று.று. தஹநாயக்க வின்  ல.பி.த. கட்சியில்  போட்டியிட்டு (அக்கட்சியில் இலங்கை முழுவதும் போட்டியிட்ட அனைவரும் தலைவர் உட்பட படுதோல்வியடைந்த போது) இவர் மட்டும் மயிரிழையில் வெற்றிபெற்றார் பெற்ற மொத்த வாக்குகள்ää 5ää743 ஆகும்.இத்தேர்தலில்  ஜனாப். மஷ_ர் மௌலானா அவர்கள் 5ää529 வாக்குகளும்ää கேற்முதலியாரின் மருமகன் ஜனாப். எம்.ஸி. அகமது அவர்கள் 1ää280 வாக்குகளும்ää ஜனாப். காதர் முஹிடீன் சட்டத்தரணி அவர்கள்  219 வாக்குகளும் பெற்றனர்.

    இவ்வாண்டில் நடந்த இரண்டாவது தேர்தலில்ää ஜனாப். எம்.ஸி.அகமது அவர்கள் தன் தாய்மாமனான கேற்முதலியாரைää தோற்கடித்து தமிழரசுக் கட்சியில் 7ää516 வாக்குகள் பெற்று பாராளுமன்றம் புகுந்தார். இப்பொதுத் தேர்தலில் கேற்முதலியார் தான் ஆரம்பித்தää அகில இலங்கை இஸ்லாமிய ஐக்கிய முன்னணிக் கட்சியில் போட்டியிட்டு  5ää651 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார். மார்ச் மற்றும் ஜூலை   பொதுத்தேர்தல்களில்;; கல்முனைத் தொகுதியில் மட்டும் மைத்துனர்ää மாமாää மருமகன்  (ஆளுமு. ஆயுடுமு. ஆஊயு)  என்று மூன்று உறவினர்கள்  குடும்பத்துக்குள்ளேயே எதிர்த்துப் போட்டியிட்டிருந்தனர்.

ஒரு கோப்பையிலே  என் குடியிருப்பு.   ஒரு கோலமயில் என் துணையிருப்பு....ää மதிப்புக் கெட்ட மாமாää   நீங்க வாலையாட்டலாமா....... போன்ற  அக்கால சினிமாப் பாடல்கள் தூள்கிளப்பிய தேர்தல்கள்; இவை. ஒரே வருடத்தில் நடந்த இரண்டு பொதுத் தேர்தல்களும் மிக்க சுவாரஸ்யமானவை என்றும்ää இவற்றைப்; போலொரு அரசியற் சுவையான தேர்தல்களை கல்முனைத் தொகுதி என்றைக்குமே சந்தித்ததில்லையெனவும் தேர்தல் சுவைஞர்கள் கூறுகின்றனர்.



1965இல் கல்முனைக் கடற்கரைப்பள்ளி முற்றவெளியில் பல்லாயிரக் கணக்கான பொது மக்கள் மத்தியில் ஒரு பென்னம் பெரிய தராசு அமைத்து கேற்முதலியார் காரியப்பரை  ஒரு தட்டிலும் மறு தட்டில் நாணயக் குற்றிகளையும் வைத்து நிறுத்து அவரது எடைக்கு நிகர் அவரே என்றும்ää அவர் நாணயம் ஆனவர் என்றும்ää அவர் நியாயம் தவறாத தராசு என்றும் புதுமையான பிரச்சார உத்திகளை கையாண்டனர்;.

கேற்முதலியார் எம்.எஸ். காரியப்பர் தலகொடபிட்டியää விசாரனைக்குழுவினால் ~சட்டப்படியான| குற்றவாளியாகக் காணப்பட்ட போது தனது நியாயத் தன்மையை மக்கள் மத்தியில் முன்வைத்து  இப்பொதுத்தேர்தலில் தன் செல்வாக்கைப் பரீட்சிக்க சுயேச்சையாகப் போட்டியிட்டு 6ää726 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.


1967 பாராளுமன்றத்தில் தனது நியாய வாதத்தை வலியுறுத்தி சுமார்  நாலரை மணித்தியாலங்கள் உரையாற்றிய கேற்முதலியார் காரியப்பர்ää  விஷேட குடியுரிமையிழப்புச் சட்டத்தின் மூலம் தனது அங்கத்தவர் பதவியை இழந்தார்.

No comments:

Post a Comment