தென்கிழக்கின் தேசபிதா.
கேற்முதலியார். எம்.எஸ். காரியப்பர்
அதிஉத்தம ஜனாதிபதிää
கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களின்ää
மகிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ்
சுதந்திர இலங்கையின் முதல் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி உண்ணாட்டலுவல்கள் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் பாராளுமன்றச் செயலாளராகக் கடமை புரிந்தவரும் கல்முனைத் தொகுதியின் முதற் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்;சருமான வன்னிமை கேற்முதலியார். எம்.எஸ். காரியப்பர் அவர்களுக்கான
ஞாபகார்த்த முத்திரை ஒன்று
தபால்தொலைத்;தொடர்புகள் அமைச்சர்
கௌரவ மஹிந்த விஜேசேகர அவர்களினால்
இன்று (2009.03.13)
கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் வெளியிட்டு வைக்கப்பெறுகிறது.
அதனை முன்னிட்டு
கல்முனை பிரதம அஞ்சல் அலுவலகத்தில்
கோலவுடை பரிசோதகராக கடமை புரிந்த என்னால் இக்கட்டுரை எழுதப்பட்டு
தேசிய பத்திரிகைகளில்
பிரசுரிக்கப்பட்டது .
தோற்றம்.
கொட்டபோவே காரியப்பரின் மகனான டாக்டர் முகமது இப்றாகிம் (ஆ.ஐ.மு.) காரியப்பரின் இரண்டாவது புதல்வர் மஹ்மூத் சம்சுதீன் காரியப்பர் (ஆ.ளு.மு) அவர்கள் 1899.04.26 ல் சாய்ந்தமருதில் பிறந்தார்.
கொழும்பு உவெஸ்லி மிசன் கல்லூரியில் கற்று முதற்தடவையில் மெட்ரிகுலேஸன் பரீட்சையில் முதற்தர சித்தியடைந்தார். இள வயதிலேயே ஒரு புத்திஜீவியாக அறியப்பட்ட எம்.எஸ். காரியப்பர் தான் சார்ந்த சமூகம் பற்றிய உரத்த சிந்தனையும். அறிவார்ந்த தேடலுமிக்கவர். ஆங்கில மூலம் அரசியலும்ää பிரஞ்சு மூலம் சட்டமும்ää அரபு மூலம் சமுகவியலும் கற்றவர். தனது கல்வியறிவும்ää ஆங்கிலப் புலமையும் காரணமாக காரணமாக சுமார் 19 வயதில் பொத்துவில் பாணமைப் பற்று வன்னிமையாகää நியமிக்கப்பட்டார். விரைவிலேயே மூன்று பெருநிலப்பரப்புகளுக்கு வன்னிமை நியமனம் பெற்றார். வன்னிமையாகவும்ää பாராளுமன்றப் பிரதிநிதியாகவும்ää அமைச்சராகவும் இப்பகுதியில் கடமை செய்த போது அவர் வித்திட்ட தீர்க்கதரிசனமிக்க சேவைகள் இன்று காயாகிக்ääகனியாகிக் கொடுக்கும் பலன்களை பெற்றுக் கொண்டிருக்கும் தென்கிழக்கு முஸ்லிம்கள் இன்று அவரை முஸ்லிம் தேசத்தின் ~தேசபிதா|வாக அங்கீகரித்து கௌரவப்படுத்துகின்றனர்.
மூளைசாலி என்றால் அவர்தான்.
பொத்துவில்-பாணமைப்பற்று வன்னிமை என்ற பெரும் பதவிக்கு 1921 களில் அவர் நியமனம் பெற்றபோது 22 வயதான இளம் வாலிபராக இருந்தார். தனது 25வது வயதில்ää ஒரேசமயத்தில்ஐந்து பெரு நிலப் பரப்புகளுக்கு ஏக வன்னிமையாக நியமனமானார்.
வன்னிமையாகப் பதவியேற்றதும் முதல் அதிரடி நடவடிக்கையாக 1927களில் பொத்துவில் முப்பனை வீதிகளில் நீண்ட காலமாக இயங்கி வந்த வழிப்பறிக் கோஸ்டியைக் கைது செய்தார். இதற்காக 1930ல் இராணுவ பொலிஸ்துறைக்கான ஒத்துழைப்புக்காக ஸேர்.எச்.எல். டோவ்பிக் கினால் கௌரவ விருதளிக்கப்பட்டார். 1935ல் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரின் ~வெற்றிச் செய்தி எத்தி வைக்கும் கௌரவ ~கொரனேசன்| (ஊழுசுழுNயுவுஐழுN) பதக்கம் அளித்துக் கௌரவிக்கப்பட்டார். இதே வருடத்தில் கிழக்கு முஸ்லிம்களில் முதன்முதலான முதலியாராக நியமனமானார்.
1939ல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகப்பற்றற்ற சட்டவியல் நீதிவானாக நியமிக்கப்பட்டடர். 1940ல் மட்டக்களப்பு மாவட்ட கல்வி ஆலோசனைச் சபை உறுப்பினராக மேதகு ஆளுநரால் பதவியளிக்கப்பட்டார். 1941ல் இலங்கை கலால் ஆலோசனைசபை உறுப்பினர் ஆனார். இதே வருடம் மீன்பிடிவளத் துறையில் உத்தியோகபூர்வமற்ற ஆலோசகராகவும் செயற்பட்டார்.
1942ல் கல்முனை மாவட்டக் கூட்டுறவுச் சங்கங்களின் மேற்பார்வையாளர் சபையின் தலைவர் ஆனார். 1943ல் விவசாய ஆலோசனைச் சபையிலும் கல்வி ஆலோசனைச் சபையிலும் உறுப்பினராகத் தெரியப்பட்டார். 1944ல் அகில இலங்கை முஸ்லிம்களின் ஏக இராசவாசல் முதலியாராக நியமிக்கப்பட்டார்;.
1947ல் சுதந்திர இலங்கையின் முதல் பாராளுமன்றத்தில் நுழைந்தவுடனேயே உள்நாட்டு கிராம அபிவிருத்தி அமைச்சின்பாராளுமன்றச் செயலாளராக இவரையே பிரதமர் டீ.எஸ். சேனநாயக்க தெரிவு செய்தார். பொலிஸ் படையை உள்ளடக்கிய முக்கியமான இவ்வமைச்சுக்கு இவர் தெரிவானதும்ää பலத்த கண்டனங்கள் எழுந்தன. அவற்றை தைரியமாக எதிர்கொண்டு வென்றார்.
1949ல் மேற்படி பதவியை உதறி விட்டு கல்முனைப் பட்டினசபைத் தேர்தலில் போட்டியிட்டு இலகுவெற்றி பெற்றார். பின்னர் 1951ன் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 2744 வாக்குகள் பெற்றார். மீண்டும் 1956ல் அமைந்த சுதந்திரக்; கட்சி அரசில் கல்முனைத் தொகுதியிலிருந்து 9464 வாக்ககள் பெற்று இலங்கையின் மூன்றாவது நாடாளுமன்றத்திற்கும் தெரிவானார்.
தொடர்ந்து 1959ல் மீண்டும் தெரிவாகி தபால்தந்தி அமைச்சராகவும் பிரதி நீதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். 1960ல் லங்கா பிரஜா தந்திரக்கட்சியில் குடை சின்னத்தில் போட்டியிட்டு அக்கட்சியில் அவர் மட்டுமே தனி ஒரு நபராக வெற்றி வாகை சூடி கலாசார சமுக சேவைகள் அமைச்சராகவும் பதவி வகித்தார்.
1960 ல்ää இலங்கை முஸ்லிம்களுக்கான முதல் அரசியல் கட்;சியைத் தொடங்கினார். ~அகில இலங்கை இஸ்லாமிய ஐக்கிய முன்னணி| யாக இது மிளிர்ந்தது. 1961ல்ää கிழக்கின் முதல் இஸ்லாமிய அரசியல் செய்திப் பத்திரிகையான ~இலங்கைத் தொண்டன்| எனும் அச்சுப் பத்திரிகையையும்; ஆரம்பித்தார்.
அவரது காலத்தில் அவரை மிஞ்சிய மூளைசாலி தென்கிழக்கில் எவரும் இருக்கவில்லை. 1930 களில் இலங்கையில் இருந்த மிகச் சிறந்த தங்கமூளை படைத்த நால்வரில் ஒருவராக கேற்முதலியார் காரியப்பர் விளங்கினார். (மற்ற மூவர்:- சேர். ஓலிவர் குணதிலகää திரு. சி. தில்லைநாயகம் ஞஊ. திரு. எமிலி சௌந்தரநாயகம் ஆகியோர்)| என அறிஞர் கின்ஸ்மன் குறிப்பிட்டுள்ளார்.
பாட்டுடைத் தலைவன்
இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் ~மிக அழகானவர்| என சபாநாயகராலும்ää ஊடகத்துறையினராலும் புகழப்பட்ட பெருமைக்குரிய ஆ.ளு. காரியப்பரின் முக அழகுக்காகவே அக்காலப் பெண்மணிகளின் வாக்குகள் யாவும் முற்று முழுதாக இவர் வசமாயின. கோட்சூட் அணிந்து துருக்கித் தொப்பி சகிதமாக பரம்பரை வாள் தரித்து சேவகர் குடை பிடித்து அவர் ஊர்வலம் வரும் தோற்றத்தைக் காண அக்காலமக்கள் இராப்பகலாகக் காத்துக்கிடந்தனர். அத்தகைய அழகர் அவர் ஒருவர்தான்.
கேற்முதலியார் காரியப்பர் அவர்கள் தனது வசீகரமிக்க ஆளுமை காரணமாக அன்றைய தென்கிழக்கு முஸ்லிம் மக்களின் நாட்டார் பாடல்களிலும்ää பொல்லடிப் பாடல்களிலும் பாடப்பட்ட முதற் பாட்டுடைத் தலைவனாக இருந்துள்ளார்.
கும்மியி துநல்ல கும்மியாம் வன்னிமை
கொள்ளுமு தலிமைப் பட்டக்கும்மி
செம்மைத ருமந்தச் செல்வன்கா ரியப்பர்
சீராளன் பேர்புகழ் விள்ளுகும்மி
00
காரியப்பர் எனுங் காரியந்தா னென்ன
ஆருங்கொடுத்த வெறும் பேரல்ல
வீரியராம் நமதாங்கில ராலே
விரும்பிக் கொடுத்த வமிசப் பட்டம்
......................................
(முதலிக் கும்மி :திரு. வே. சாமித்தம்பி ஆசிரியன்.)
00
இதயம் நெறஞ்ச காரியப்பேரு
உதய சூரியனக் கொணர்ந்தாரு
முகவடி வனிந்த வன்னியாரு
முதலியார விட்டா வேறுயாரு..
...................
(நேரடிக் குரல்: மீ.மு. அகமதுலெவ்வை புலவர். செயின் காக்கா)
00
கட்டக் கால எட்ட வெச்சி- வட்டத் தொப்பி வடிவா அணிஞ்சி
வெட்டும் வாள இடுப்புல சொருகி- வந்தாரு வன்னியாரு...
வடிவா நீ எண்ணிப் போடு...-புள்ளடி-- எண்ணிப் போடு..
00
கன்னல் மொழி மாதே கண்டதில்லையடி
காரியப்பர் எங்கள் வன்னிமையாம்
அன்னவன் தன்னை விடவுமார் பெற்றனர்..ஆ..
இவ்வருமையாம் பட்டந்தன்னை
00
பேரு வெளஞ்ச வங்கிசம்- நேருல வந்த பொக்கிஷம்.
ஆரு தந்த பாக்க்pசம்- ஆரும் சொல்லும் மந்திரம்--
காரியப்பர் பேருதான்...ஆரும் சொல்லும் மந்திரம்...
00
வாங்க.. வாங்க.. அழகு ராசாவே..
எங்க வாசல்ல பூத்த- செவத்த ரோசாவே..
(பொல்லடிச் சிந்து:: மீ.மு. அகமதுலெவ்வை புலவர். செயின் காக்கா)
பாராளுமன்றத்தில் கர்ஜனைகள்.
இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது உலக முஸ்லிம்களுக்காகவும் உரத்துக் குரல் கொடுத்த விந்தை மனிதர் அவர். எகிப்தின் சூயஸ் கால்வாய் 1950 களில் ஆங்கிலேயää பிரான்ஸிய ஆதிக்கத்திலிருந்த சமயம் எகிப்து முஸ்லிம்கள் அதை எதிர்த்து கிளர்ச்சி செய்தபோது பிரிட்டிஸ்படைகள் கனரக ஆயுதப் படைகளுடன் ~போயார்ட் ஸெயிட்| துறைமுகப்பட்டணத்தை தகர்த்து துவம்சம் செய்த கொடுமையை எதிர்த்து இலங்கைப் பாராளுமன்றத்தில்ää அல்ஹாஜ். ஏ.அஸீஸ் பா.உ.அவர்கள் கொண்டு வந்த கண்டனப் பிரேரணையை பாராளுமன்றத்தில் ஆதரிக்க ஆங்கிலேய அரசு சார்பு ஆட்சியிலிருந்த யாரும் முன்வரவில்லை.
இதுகண்டு பொறுக்காத கேற்முதலியார்ää தாம் எதிர்க்கட்சியில் இல்லாமல்ää அரச பக்கத்திலிருந்த போதும் கூட துணிந்து ஆங்கிலேயருக்கு எதிராக கண்டனமிக்க உரையை ஆற்றி பிரேரணையை ஆதரித்தார்.
எனினும்ää இப்பிரச்சினையை இலேசாக விட்டுவிடாதää ஆளும் கட்சிப் பிரதம கொறடாவான (ணுநுநுPறுஐP) திரு. ஏ. குணஸி;ங்ஹää பாராளுமன்றத்தில் இவ்வாறு நடந்து கொண்டதற்கு விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்தையும்ää ~அலட்சியமாகப் புறக்கணித்து| விட்டார் கேற்முதலியார்.
இதனால் கோபமுற்ற ஆங்கில அரச சார்பு நியமன சிங்களப்பிரதிநிதியான திரு. சிங்கில்டன் சொலமன்ää ~முதலியார் காரியப்பர் இலங்கையின் பாராளுமன்றப் பிரதிநிதியா அல்லது எகிப்தின் பிரதிநிதியா..?| என்று வெகுண்டெழுந்த போதுää ~முஸ்லிம்கள் உலகில் எங்கிருந்தபோதும் அவர்கள் ஒரே சமூகமே..| என்று தடாலடியாகப் பதிலளித்து வாயடைக்க வைத்த தைரியசாலி மனிதர் அவர்.
இதுகண்டு வெகுண்டெழுந்த ஐ.தே.க. செயலாளர்ää ~கேற்முதலியார் ஒரு கட்சியின் கட்டுப்பாட்டை மீறிவிட்டார் என்று சத்தமிட்டார்.அவருக்கு சுடச்சுடவும்ää நையாண்டியாகவும்ää பதிலிறுத்த கேற்முதலியார்ää ~நான் ஒரு கட்சிக்காரனல்லன். அரைக் கட்சிக் காரன். எனக்கு கட்சியில்ää அரை டிக்கட்தானே கிடைத்தது| என்றுää அந்தத் தடவை கல்முனைத் தொகுதியில்ää ஐ.தேகட்சி சார்பில்ää இரு வேட்பாளர்களை நிறுத்தியதை நாசூக்காகக் குத்திக் காட்டினார். இதனால் மேலும்ää ஆத்திரமடைந்த திரு. ஏ.ஈ. குணஸிங்ஹ இப்பிரச்சினையை மறுபடியும் பிரதமரிடம் கொண்டுசென்றுää கேற்முதலியாருக்கெதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாதென நச்சரித்த போது பிரதமர் அவரிடம்ää ~மிஸ்டர்ää குணஸிங்ஹää கேற்முதலியாரை உமக்குத் தெரியாது. இந்தக் காதால் புகுந்து மற்றக் காதால் வெளிவரக் கூடியவர். இதனை விட்டுவிடும்| என்று கூறிவிட்டார்.
காரியப்பர் ஏழு மொழிகளில பாண்டித்திய முடையவராகவிருந்ததால்; அவரது இலத்தீன் கலந்த ஆங்கிலத்துக்குää சக பாராளுமன்ற அங்கத்தவர்களால்ää எதிர்வாதம் பேச முடியாமலிருந்தது. அவரதுää பிரஞ்சு மொழி அறிக்கைகள் ஆங்கிலேயரையும் பயமுறுத்தின. பாராளுமன்றத்தில் டொக்டர். என்.எம். பெரேராää டொக்டர். கொல்வின் ஆர்.டி. சில்வாää திரு. பிலிப் குணவர்த்தன போன்ற இடதுசாரி மூளைசாலிகளின் பலத்த கண்டனமிக்க கேள்விகளுக்கு உடனுக்குடன் சுடச்சுடப் பதிலளிக்கும் ஆற்றல்மிக்க கேற்முதலியாரின்ää அறிவும்ää அஞ்சாநெஞ்சும் நம்மை வியக்க வைப்பன.
மற்றொரு சமயம்ää ~அடங்காத்தமிழன்| என வர்ணிக்கப்பட்ட பேராசிரியர் திரு. ஸீ.சுந்தரலிங்கம் பா.உ. அவர்களின் ~முஸ்லிம்களைப்பற்றிய ஒரு நாகரிகமற்ற கூற்றுக்கு| அவ்விடத்திலேயே தக்க பதிலடியை ஆக்ரோஸமாகக் கொடுத்து அடங்காத் தமிழனை அடக்கியவர் கேற்முதலியார் ஒருவரே
கல்லோயாத் திட்டம்.
தென்கிழக்கு வயல்வெளிகள் மாறிமாறிவரும்ää வெள்ளம்ää வரட்சியினால்ää போகத்திற்குப் போகம்ää பாதிக்கப்பட்டு வந்தபோதுää இதற்கொரு நிரந்தர தீர்வு காண்பதாக பொதுமக்களுக்கு தேர்தல் வாக்குறுதியளித்து தேர்தலில் நின்று வெற்றிபெற்ற கேற்முதலியார்ää பட்டிப்பளை ஆற்றுக்கு பெருகிவரும்ää வெள்ளநீரைகல்லோயாவின் இரு குன்றுகளுக்கு இடையே தேக்கிவைத்து அணைகட்டி தேவைக்கேற்ப நீரைப் பயன்படுத்தும் மூளைசாலிகளின் திட்டத்தை பிரதமரிடம வலியுறுத்தி அதனை செயலாக்கம் செய்வித்தார். 1950 களில் உருவான இக் ~கல்லோயாத்திட்டத்தின்| செயலாக்கற் பிதா என்ற புகழையுமடைந்தார்.;
கல்முனையின் பொற்காலம்.
கல்முனை மாநகரின் ~நிர்மானச்சிற்பி| கேற்முதலியார்காரியப்பர் அவர்களேயாவார். கேற்முதலியார் காரியப்பர் அவர்கள் இப்பகுதியை ஆண்ட காலம் ~பொற்காலம்| என சரித்திரப் புலமையுடையோரால் வர்ணிக்கப்படுகிறது. 1940 களில் சௌக்கிய சபை அந்தஸ்த்துடனிருந்த கல்முனையை பட்டின சபையாகத் தரமுயர்த்தினார். தன் சொந்த நிலபுலன்களை பாடசாலைகள்ää மத்ரசாக்கள்ää பள்ளிவாயில்கள் நிர்மாணிப்புகளுக்காக முற்றிலும் இலவசமாக வழங்கியவர். அந்த நிலங்களில் எழுந்த கட்டுமானப் பணிகளுக்கு நிதியையும் ஒதுக்கிக் கொடுத்தவர். நகர விவசாய ஸ்தரிப்பும் திட்டமிட்ட நீர்ப்பாசன வடிகாலமைப்புகளும்ää அவரது சொந்த மூளையில் உதித்தவையாகும்.
முதன்முதலாக ஆங்கிலக் கல்வியை அறிமுகம் செய்யும் முகமாகää சாய்ந்தமருதில்ää தனது பெரிய வளவு ஒன்றை ஜூனியர் ஸ்கூல் அமைப்பதற்காக (இன்றைய கல்முனை ஸாஹிறா) 1949 ல் கல்வித் திணைக்களத்திற்கு அன்பளி;ப்பாக எழுதிக் கொடுத்தார். தென்கிழக்கில்ää மின்சாரமும்ää தொழிநுட்பமும் கொணர்ந்து அறிமுகப்படுத்தினார். குறிப்பாக கல்முனையில் கல்வி கலாச்சார சமூக நலத்துறைகளை மக்கள் மயப்படுத்தி ஒரு விழிப்புணர்வை உருவாக்கினார்.
1952.12.31ல் கல்முனை பிரதேசத்தில் முதன்முதலாக மின்சார ஒளி பளிச்சிட்டு கல்முனை நகரைப் பிரகாசிக்கச் செய்தார் கேற்முதலியார். . அத்துடன்ää இதே காலத்தில் கல்முனை நகரில்ää புனரமைக்கப்பட்ட நகர ஜூம்மாப் பள்ளிவாயிலையும் அமைத்துக் கையளித்தார். மேலும்ää 1953 ல் கல்முனை முற்றவெளிக் காணியொன்றில் பட்டின சபைக்காக ஒரு கட்டிடத்தை ஸ்தாபிக்க முயன்றபோது அதற்குப் பக்கத்திலிருந்த கிறிஸ்தவ தேவாலயத்திற்கு இதனால் பாதிப்பு ஏற்படுமெனக் கருதிய பிரதம குரு பாதிரி குக் அவர்களும்ää கத்தோலிக்க அடிப்படைவாதிகளும் எதிர்த்தனர். ஆனால்ää அதன் பக்கத்திலேயே முஸ்லிம் பள்ளிவாயிலும் இருப்பதைக் காரணமாகச் சுட்டிக் காட்டிய கேற்முதலியார் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் ஒரே இரவில் கட்டிடத்தைப் ப10ர்த்திசெய்து அதிகாலையிலேயே திறப்பு விழாவும் செய்துமுடித்தார்.
1939 களிலான இரண்டாம் உலகப் போர்க்காலத்திலும்ää பின்னரும்ää கிழக்கை உணவு உற்பத்திப் புரட்சியிலீடுபடுத்தி நெற்களஞ்சியமாக மாற்றினார். பொலநறுவை பாராக்கிரமபாகு குளத்தை நவீன முறையில் புதுப்பிக்க தொழிலாளர்களையும்ää தொழினுட்ப உதவிகளையும் வழங்கினார். 1964ல் மாவடிப்பள்ளி மர்க்கஸ் அமைப்பதற்காக 3 ஏக்கர் அரச நிலத்தை ஒதுக்கிக் கொடுத்தார்.
இவ்வாறு இன்னும் வெளிப்படுத்தப்படாமலும்ää ஆவணப்படுத்தப்படாமலும் அவரது எத்தனையோ சேவைகள் உள்ளன. கல்முனைத் தொகுதி தவிரவும்ää கேற்முதலியார் காரியப்பர் அவர்களின் பெயர் சூட்டப்பட்ட பாடசாலைகள்ää ஆராதனை மண்டபங்கள்ää ஊர் வீதிகள்ää சம்மாந்துறைää மாவடிப்பள்ளிää நிந்தவூர்ää அக்கரைப்பற்றுää பொத்துவில்ää வீரமுனைää நற்பிட்டிமுனைää மருதமுனைää காரைதீவுää மல்வத்தைää அம்பாறை போன்ற தென்கிழக்கின் ஊர்களெங்கும்ää பரவலாகக் காணப்படுவதே அவரது பரந்துபட்ட சேவைக்கு திட்டமான சான்றுகளாகும்.
ல்விக்கொரு காரியப்பர்
1941ல்ää ஆசிரியர் பயிற்சிக் கலாசாவை ஒன்றைää கல்முனையில் ஆரம்பிக்கக் கோரி அதற்காக ஏராளமான மகஜர்களை விடுத்தார். இது பின்னர் அட்டாளைச்சேனையில் நிறுவப்பட்டது.. 1945 ல் அப்பாப்பிள்ளை ஆணைக்குழுவின் முன்பாகää கிழக்குப் பல்கலைக்கழகம் ஒன்றைää கல்முனையில் தொடங்கக் கோரும் விபர அறிக்கையைச் சமர்ப்பித்தார். தமிழ்த் தலைவர்களான தமிழரசுக்கட்சித் தலைவர் திரு.ஜீ.ஜீ.பொன்னம்பலம்ää திரு.செனட்டர் நடேஸன் மற்றும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் வாதிட்டு முஸ்லிம் பாடசாலைகளும்ää அவற்றுக்கு முஸ்லிம் ஆசிரியர்களின் ;இன்றியமையாமையையும் வலியுறுத்தி ஏற்கச் செய்வதில் அவர் அடைந்த மகத்தான வெற்றி ஒரு சமுகத்தின் கல்வி உரிமை மீதான உச்சக்கட்ட வெற்றியாகும். இந்த வாதப் பிரதிவாதங்களை தனிஒரு நூலாகவும் வெளியிட்டுள்ளார்.
கல்விக்கொரு காரியப்பர்
கல்முனைத் தொகுதியில் உள்ள பாடசாலைகளில் 75 வீதமானவை கேற்முதலியாரின் உருவாக்கமேயாகும். 1946 ல் சாய்ந்தமருது வடக்கு அமுக. பாடசாலை .(கமு.அல் ஜலால் வித்தியாலயம்) 26.06.1948ல் கடற்கரை அரசாங்க முஸ்லிம் கலவன் பாடசாலை (அல்பஹ்ரியா மகா வித்தியாலயம்) 16.11.1949ல் சாய்ந்தமருது ஜூனியர் ஸ்கூல் (கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை) 1949ல். பெரியநீலாவனை அரசினர் வித்தியாலயம். (விஷ்னு மகா வித்தியாலயம்) 1950ல்ää பெரியநீலாவனை அ.மு.க. பாடசாலை. (புலவர்மணி ஷரிபுதீன் வித்தியாலயம்) 1950ல். மாவடிப்பள்ளி முஸ்லிம் வித்தியாலயம் 1951 ல்ää மருதமுனை பெண்கள் பாடசாலை. 01.04.1952 ல் மாளிகைக்காடு மல்ஹருஸ்ஷம்ஸ் வித்தியாலம்.1952 ல்ää பாண்டிருப்பு அ.மு.க. பாடசாலை. (அல்.மினன் முஸ்லிம் மகா வித்தியாலயம்) 1955 ல் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயம் புனர்நிர்மானம். 1958 ல் கல்முனைக்குடி ஆண்கள் பாடசாலை (அல்.அஸ்ஹர் வித்pயாலயம்) மீள் நிர்மானம். 20.05.1959 கல்முனைத் தெற்கு அரசாங்க முஸ்லிம் கலவன் பாடசாலை. (அல்.மிஸ்பாஹ் வித்தியாலயம்.) 01.09.1959 ல் சாய்ந்தமருது அல்கமறுன் வித்தியாலயம் 1965ல் மிஷன் பாடசாலையாக இருந்ததை புனர்நிர்மானித்து அல்-அமான் வித்தியாலயம் என ப்pரகடனம் செய்தார்.
தமிழர்களுடான நல்லுறவு
தென்கிழக்குத் தமிழ் மக்களுடன் நெருக்கமான இனநல்லுறவைப் பேணிவந்த அரசியல்வாதிகளில் கேற்முதலியாரின் வழி தனி ஒரு முன்னுதாரணமாகும். உதாரணமாக தமிழ் மக்களுடனான அவரது அணுகுமுறைக்கு பின்வரும் அவரது உரையை காட்டலாம்:-~
~.............இளம் வயதிலே ஐந்து பெரும் பகுதிகளை சிறப்பாகää ஏறத்தாள முப்பது வருடங்கள்ää வன்னிமையாக இருந்து பரிபாலனம் செய்தேன். இப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். தமிழரையும் முஸ்லிம்களையும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் காத்து வந்திருக்கின்றேன். இக்காலங்களில் ஒரு தமிழ்ச் சகோதரனையாவது நீதியீனமாக நடத்தினேன் என்று சொல்லட்டும்? ஓரு உதாரணத்தையாவது கூறட்டும்? மிகுந்த அன்புடனேயே எல்லோரையும் நடத்தினேன்ää மேலும்ää சைவ சமயத்தைச் சேர்ந்த வன்னிமைமார் செய்யாத பெரு உதவிகளை தமிழ்க் கோயில்களுக்குச் செய்திருக்கிறேன். வீரமுனை சிந்தாத்துறைப் பிள்ளையார் கோயிலுக்கு அரசினர் வைத்திருந்த 110 ஏக்கர் பூமி மல்வத்தைக் குளத்தை அரசினால் கழற்றிக் கோயிலுக்குக் கிடைக்கும்படி செய்தேன். இச் செய்கையால் கிழக்கு மாகாண ஏஜெண்டுத் துரையின் கோபத்தையும் பொருட்படுத்தாமல் நேருக்கு நேர் வாதாடி கோயிலுக்கு காணியாக ஆக்கிவிட்டேன். இந்த ஆதனம் இன்று இலட்சக் கணக்கான (தற்போது கோடிக்கணக்கான) பெறுமதியுள்ளது.கல்லாற்றுப் பிள்ளையார் கோயிலுக்கு 100 ஏக்கர் வேளாண்மைப் பூமிகளைக் கிடைக்கும்படி செய்ததின் காரணமாக மட்டக்களப்பு டிஸ்றிக் கோர்;ட்டில் எதிரியாக (சிங்களவர்களால்) வழக்கு வைக்கப்பட்டேன். இவ்வழக்கில் நான் போராடி வெற்றிபெற்று கோயிலுக்கு இந்த ஆதனத்தைச் சேர்த்தேன்.
இந்த உண்மைகளை நீங்கள் கல்லாற்றுப் பிள்ளையார் வண்ணக்குமார்களிடமு;ம் வீரமுனை சிந்தாத்துறைப் பிள்ளையார் கோயில் வண்ணக்குமார்களிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இந்த உண்மைகளை இங்கு உரைப்பது ஏதோ மதிப்புப் பெற்றுக் கொள்வதற்கன்று. இச்செய்கைகளை எனது வம்சக் கடமை யாகவே நான் உணர்ந்து செய்தேன். பண்டைக்கால சரித்திரப்படி எனது முன்னோர் திருக்கோயிலிலுள்ள பெயர் போன சைவக் கோயிலிலும்ää கதிர்காமத்திலுள்ள கோயிலிலும் வருடாவருடம் கௌரவமான சடங்குகளோடு உரிய வண்ணக்குமாரால் வரவேற்கப்பட்டனர். உபசார வரவேற்புச் சந்திப்பு நடந்த ஆற்றங்கரை இன்றைக்கும் இலங்கைப் படத்தில் ~காரியப்பர் ஆறு| என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.| (1965.02.21)
பின்னப்பட்ட சதிவலை
அரசியலிலும்ää பொதுப்பணியிலும்ää தென்கிழக்கில் முடி சூடா மன்னராக ஆட்சி செய்த காரியப்பரை கூட்டுறவுச் சங்கப் பெருச்சாளிகளான சில சுயநலமிகள் திட்டமிட்ட சில வழக்குகளில் சிக்குமாறு செய்தனர்ää அவரை ஒழித்துக் கட்டாவி;ட்டால் தமக்கு எவ்வித அரசியல் முன்னேற்றமுமில்லையெனக் கண்ட அவர்கள் பலமான சில பொய்ச்சாட்சிகளை தயார் செய்து தாய் வழி க்காரியப்பர் குடும்பத்துக்குள்ளிருந்தே சட்ட உதவிகளும் பெற்றுச் சோடித்த வழக்குகளில் சதிமுயற்சி மூலம் சிக்க வைக்கப்பட்டார்.
ஆனால்ää கேற்முதலியார் அவர்கள்ää கெனமன் விஸாரனைக் குழுவால் 1965ல் நிரபராதியாக தீர்ப்பளிக்கப்பட்டார். ஆனால்ää தலகொடபிட்டியää ஆணைக்குழுவினால் ~சட்டப்படியான| குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டார். எனினும் அஞ்சாநெஞ்சினரான கேற்முதலியார்ää தன் சொந்தச் செல்வாக்கைப் பரீட்சிக்கு முகமாகவும்ää தனது நியாயத் தன்மையை மக்கள் மத்தியில் முன்வைத்தும் எதிர்நோக்கி வந்த பொதுத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு மக்களின் தீர்ப்பைக் கேட்டார்.
சுமார் ஏழாயிரம் வாக்காளரைக் கொண்ட அப்போதைய கல்முனைத் தொகுதியில் 6726 வாக்குகளைப் பெற்று தன் அரசியல் நேர்மையை ஆணித்தரமாக நிரூபித்து அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஒருவர் வெறும் 275 வாக்குகளையே பெற்றார்.
பின்னர் பாராளுமன்றத்திலும் தனது நியாயத் தன்மையை விளக்கி சுமார் நாலரை மணி நேரம் உரையாற்றி சாதனை புரிந்தார். எனினும்ää விஷேட குடியுரிமைச் சட்டத்தின் கீழ் தனது உறுப்புரிமையை அவர் இழந்தார்.
ஓய்வின்போதும் ஓயாத வேலைகள்.
தனது பாராளுமன்ற உறுப்புரிமையை அவர் இழந்த பின்னும் கூட சிங்கள அரசியல்த் தலைவர்கள் காரியப்பர் அவர்களிடமே ~இரகசிய ஆலோசனைகள்| பெற்று பாராளுமன்றத்தில் தமது ~கெட்டித்தனமான| விவாதங்களை ஆரம்பித்து வைத்தனர். பொதுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கூடää தான் சார்ந்த சமூகத்திற்கு தன்னாலான சேவைகளை ஒரு தினசரிக் கடமையாக மேற்கொண்டிருந்த ஒரே தலைவர் கேற்முதலியார் காரியப்பர் ஒருவரேயாவார்.
1985 களில் இலங்கையில் ஆரம்பித்த ஆயுதப் போராட்ட சூழ்நிலையின் கீழ் முஸ்லிம் இளைஞர்கள் தமது பாராளுமன்ற உறுப்பினர்களைப் புறக்கணித்துää அரசியல் ஓய்வு பெற்றிருந்த கேற்முதலியார் காரியப்பர் அவர்களை மறுபடியும் அரசியலுக்கு வருமாறு வலியுறுத்திக் கேட்ட போது ஆயுதப் போராட்டத்தின் அபாயத் தன்மையை விளக்கி அவர்களை அமைதிப்படுத்தி ~குர்ஆன் மத்ரசாக்கள்| மூலமான ஒரு தனித்துவப் புரட்சி மலரும் திட்டத்தை வெளியிட்டுää முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்கும் முன் ~முதலில் முஸ்லிம்|களாக வாழுதல் வேண்டும் எனத் தெரிவித்தார்.
தென்கிழக்கின் தேசபிதா
தென்கிழக்கு மக்களுடன்ää ஒரு சாதாரண பிரசையாக வாழ்வதைää தனது சமுகக் கடமையாகவே கருதிய கேற்முதலியார் காரியப்பர் அவர்களைää பிற்காலத்தைய ஐ.தே.க. அரசுää பாகிஸ்தானுக்கான இலங்கைத் தூதுவராக அனுப்பத் தீர்மானித்த போதிலும்ää அதனை மறுத்து விட்டுää தன் கிராமத்திலேயே வாழ்ந்தார். ஆயுதப் போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்த காலங்களின் போது கூட கொழும்புக்கு புலம் பெயர்ந்து ஓடாமல்ää தன் மண்ணிலேயே இறுதி வரை வாழ்ந்தார்.
தொண்ணூற்றிமூன்று வயது வரை உயிர் வாழ்ந்த அந்த மாமனிதர் 1989.04.17 ம் திகதி காலமானார்
கைம்;மாறு என்ன..?
தென்கிழக்கின் ஒரு ~முஸ்லிம்தேசபிதா| என புகழத்தக்க கேற்முதலியார் எம்.எஸ். காரியப்பர் அவர்களை இலங்கைஅரசு உரியமுறையில் கௌரவப்படுத்தவில்லையென்பது தென்கிழக்கு முஸ்லிம்களின் மிகப் பெரிய ஆதங்கமாகவிருக்கிறது.
எனினும் அவர் மரணித்து 20 வருடங்களுக்குப் பின்னர் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் முயற்சியினால் 2009ல் தபால் அமைச்சராக இருந்த கௌரவ. மஹிந்த விஜேசேகர அவர்களினால் கேற்முதலியார் காரியப்பருக்காக ஞாபகார்த்த ஐந்து ரூபாய் பெறுமதி கொண்ட முத்திரை ஒன்றும் முதல்நாள் உறையும் வெளியிட ஆணையிடப்பட்டது.
இதற்கான பிரதான வைபவம் அவர் உருவாக்கிய கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் கேற்முதலியார் காரியப்பர் மண்டபத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு கருஜயசூரிய அவர்களினால் 2009.03.13ம் திகதி வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்றது.
எனினும் மேலும் சில காரியங்கள் நடைபெறத் தேவையாகவுள்ளது.
Ö அவரது சுருக்க வாழ்க்கைச் சரித்திரம் இஸ்லாமியப் பெரியார் வரிசையில் தமிழ்மொழி மற்றும்ää வரலாறு பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்தல்.
Ö அவர் மரணிக்கும்போது வாழ்ந்த அவரது இல்லத்தைச் சூழவுள்ள சாய்ந்தமருது 1ம் பிரிவை ~காரியப்பர் நகர்| என உத்தியோகபூர்வமாகப் பிரகடனம் செய்தல்.
Ö கேற்முதலியாரின் பெறுமதிமிக்க ஆவணங்கள்ää உரைகள்ää நூல்கள்ää பரம்பரைப் புராதன நினைவுப் பொருட்கள் முதலானவற்றைப் பதுக்கி வைத்திருப்போரிடமிருந்து அவற்றைத் திரட்டி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பாலமுனை நூதனசாலைக்கு கையளித்தல்.
Ö அவரது நினைவுநாளை வருடந்தோறும் தென்கிழக்கில் விஷேடமாக அனுஷ்டித்தல்
என்பனவற்றுடன்ää அவரது வாழ்க்கை வரலாறு தனியானää விரிவான நூலுருவாக்கப்படலும்ää ஒரு வரலாற்றுத் தேவையாகும். இப்பணிகளை தென்கிழக்கின் இன்றைய புகழ்பெற்ற அரசியல்வாதிகளும்ää பிரமுகர்களும்ää பொதுமக்களும் ஒன்றிணைந்துää ஒரு ~விழா ஆணைக்குழு| ஒன்றினை பரவலாக ஆரம்பித்து இதனை சாத்தியமான வழிகளில் முன்னெடுத்துச் செல்வதே நாம் அந்த தென்கிழக்கின் தேசபிதாவுக்குச் செய்யும் ஒரு சிறிய நன்றிக் கடனாகவிருக்கும்.
0
(அவர் மறைந்துää இருபது வருடங்களுக்குப் பின்னர்ää இன்று (13.03.2009) அன்னாருக்காக ஒரு நினைவு முத்திரை ஒன்றை வெளியிடää கௌரவää தபால்தொலைத் தொடர்புகள் அமைச்சர். திரு. மஹிந்த விஜேசேகர அவர்கள் முன்னnடுத்த முயற்சிகளை இப்குதி மக்கள் ம்டடுமன்றி அகில இலங்கை முஸ்லிம்களும் நன்றியுடன் என்றென்றும் ஞாபகத்தில் கொண்டிருப்பர் என்பது திண்ணம்.0 _
0
ராசிக் காரியப்பர் முஹம்மது நௌஸாத் -
நன்றி- சுடரொளி -தினகரன் 13.03.2009)
நன்றி- சுடரொளி -தினகரன் 13.03.2009)
No comments:
Post a Comment