அப்பாவின் முகம் அந்தி வானம்
---தீரன்.ஆர்.எம். நௌஸாத்
அந்தி வானத்தை
அண்ணார்ந்து பார்க்கும் போதெல்லாம்
அப்பாவின் ஞாபகம் வரும்.
தேசிப்பழம் அவரது நிறம்.
கொச்சிப்பழம் அவரது மூக்கு.
தக்காளிப் பழம் அவரது கன்னங்கள்.
அரசியல்
ஞானப்பழமாய் வாழ்ந்திருந்த
அழகுப் பழம் அப்பா..!
வன்னியனார் வருகின்றார் என்றதும்
வரும் வழியெல்லாம்
மகளிரின் விழியெல்லாம்
பூக்களாய்ச் சொரிந்திருக்கும்
~மாப்பொட்டி|யின் முகவடிவில்
முக்காட்டின் நழுவல் மறந்திருக்கும்.
வாள் தரித்து ஆள் வரும்போது
வானவில் வந்து அவருக்கு
வட்டக் குடை பிடிக்கும்.
வாலிபர் தம் திண்தோள்கள்
தினவுகொண்டு துடித்திருக்கும்.
அப்பாவின் ரோசாப்ப10 நெற்றியில்
அத்தர் மணமணக்கும்.
மல்லிகைப் பூப்போல மனிதர் சிரிக்கையில்
மனத்தோட்டம் முழுவதும்
மலர்த் தோட்டமாகும்.
அப்பாவின் அருகாமையில்
இமைப் பொழுதில்
பகற்பொழுது பறந்திருக்கும்
அப்போதெல்லாம்.!
இப்போதெல்லாம்ää
அந்திப் பொழுதில்
அந்த வானத்தை
அண்ணார்ந்து பார்க்கும் போது மட்டும்
அப்பாவின் ஞாபகம் வரும்.!
(2009)


No comments:
Post a Comment